அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு இந்தியர்களும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் வாங்கிய பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவு முதலீடு வர தொடங்கியது.
ஆனால் விதிமுறைகளை மீறி முதலீடுகள் வருவதாக மத்திய அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இதனால் பிலிப்காட் நிறுவனத்திற்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இந்தியாவில் அந்நிய முதலீடு கொள்கைகளை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பொருட்களை பிளிப்கார்ட் தனது தளத்தில் முறைகேடாக விற்பனை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் அதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் சரியாக விளக்கம் அளிக்கவில்லை எனவும், அபராத தொகையை செலுத்தவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசில் 90 நாட்களுக்குள் அந்நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.