உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிக்கு வரவேண்டும் என சில நாட்டு அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளும், பதின் பருவத்தினரும் தடுப்பூசி போட்டு தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. இளம் வயதினரை விட பெரியவர்களுக்குத்தான் நோய் பாதிப்புக்கான அபாயம் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளது.