தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, “ரேஷன் கடைகளில் சுமார் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது. அவற்றை விரைவில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சுமார் 8000 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. அவற்றை சொந்த கட்டடங்கள் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.