காலிபிளவர் 65
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் – 1
மைதா – 2 ஸ்பூன்
சோளமாவு – 5 ஸ்பூன்
அரிசி மாவு – 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
65 மசாலா – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலை – தலா 1 கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 3
தயிர் – 1/2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் காலிபிளவரை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கிண்ணத்தில் மைதா , சோளமாவு , அரிசி மாவு , மிளகாய்த்தூள் , இஞ்சிபூண்டு விழுது , கரம் மசாலா , 65 மசாலா , கறிவேப்பிலை, மல்லி இலை , பச்சை மிளகாய் , தயிர் , உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் . இதில் காலிபிளவரை போட்டு 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , காலிபிளவரை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் 65 தயார் !!!