கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா வைரசால் அமெரிக்காவில் அதிகப்படியான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை அந்நாட்டு மக்கள் செலுத்தி வருவதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் சுமார் 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில் 19.3 கோடி மக்கள் முதல் தவணை தடுப்பூசியையும் 16.5 கோடி மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திகொண்டுள்ளதாக அமெரிக்க நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசிகள் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.