அயர்லாந்தில், ஒரு ஆட்டுக்கிடாய் 1 கோடி ரூபாயை தாண்டி விற்பனையாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அயர்லாந்தில் இருக்கும் Co Donegal-ல் உள்ள Ballybofey என்ற பகுதியை சேர்ந்த விவசாயியான Richard Thompson என்பவர், Suffolk வகை ஆட்டுக்கிடாயை வளர்த்து வந்துள்ளார். இக்கிடாய் பிறந்து 7 மாதங்கள் ஆன நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று Blessington Mart in Co Wicklow என்ற இடத்திற்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத வகையில், 44,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. இது இந்திய மதிப்பிற்கு 1,03,89,596 ரூபாய் ஆகும். அயர்லாந்தில், ஒரு ஆடு இவ்வளவு தொகைக்கு விலை போயிருப்பது இதுதான் முதல் முறை. Richard Thompson, இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, அதிக தொகைக்கு விற்கப்படும் என்பது தெரியும்.
This 'golden' ram sold for a record-breaking £37K 😯 pic.twitter.com/6YGT6mQpuq
— The Sun (@TheSun) August 5, 2021
ஆனால், இவ்வளவு தொகைக்கு விற்பனையாகும் என்று நினைக்கவில்லை. இதுபோன்ற விஷயங்கள் வாழ்க்கையில் எப்போதாவது தான் நிகழும் என்று தெரிவித்துள்ளார். வடக்கு அயர்லாந்தில் இருக்கும் கொலரைன் பகுதியை சேர்ந்த டென்னிஸ் டெய்லர் என்ற விவசாயி தலைமையிலான குழு தான் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளது. அதாவது இந்த ஆடு பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. எனவே, இதனை இனப்பெருக்கம் செய்ய வைக்க பலரும் முயன்று வருகிறார்கள்.