Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 8 விக்கெட் வித்தியாசத்தில் ….சேலத்தை வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்                      8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி  வெற்றி பெற்றுள்ளது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம்  அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்கள் எடுத்தார். நெல்லை அணி தரப்பில் ஹரிஷ் 2 விக்கெட்டும் , கேப்டன் பாபா அபராஜித் மற்றும் அதிசயராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் பிறகு களமிறங்கிய நெல்லை அணி 121 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரரான சூர்யபிரகாஷ் 9 ரன்களில் ஆட்டமிழக்க ,கேப்டன் பாபா அபராஜித் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய சஞ்சய் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் . இறுதியாக 2 விக்கெட் இழப்பிற்கு நெல்லை அணி 121 ரன்கள் எடுத்தது அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |