சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதன்பின் காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் டேவிட் , தமிழ் பேரரசு, தமிழ்மணி மற்றும் சத்யராஜ் என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.