Categories
உலக செய்திகள்

மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராகும் பிரான்ஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்..!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில நாடுகள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பில், அவர் கூறியுள்ளதாவது, வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். எனினும் அனைத்து நபர்களுக்கும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த முடியாது. விரைவில் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் இருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லாத வயதானவர்களுக்கு தான் செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |