Categories
உலக செய்திகள்

இதுதான் அவங்க எடுத்த நடவடிக்கை..! அரியணை ஏற தயாராகும் வில்லியம் கேட்… ராஜ குடும்ப நிபுணர் தகவல்..!!

ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அரியணை ஏற தயாராவதற்காக இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் சமீபகாலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl இளவரசர் வில்லியம், கேட் தம்பதியினர் வருங்கால மன்னர், ராணியாக அரியணை ஏற தயாராவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் பாரம்பரியமாக வருங்காலத்தில் மன்னர் மற்றும் ராணியாக அரியணை ஏற தயாராவதற்காக Amner Hall, Norfolk உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே தனது தாய் 95 வயதிலும் நல்லாட்சி புரிந்து வருவதால் இளவரசர் சார்லஸ் அடுத்த மன்னராவதற்காக காத்திருந்து கலைத்து போனதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இனி சார்லஸ் மன்னராக பதவி ஏற்றாலும் குறைந்த காலமே அரியணையில் அமர்வார். எனவே வில்லியமும், கேட்டும் தற்போது அரியணை ஏற தயாராவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை தவிர்த்து பிள்ளைகளுடன் வீட்டில் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

Categories

Tech |