Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS கோவை கிங்ஸ் அணிகள் ….! இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று இரவு  நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் அணி,கோவை  கிங்ஸ் அணியுடன் மோதுகிறது .

5 சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 19-வது நாளான இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில்  சேப்பாக் அணி 3 வெற்றி , ஒரு தோல்வி ஒரு முடிவு இல்லை என 7 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

அதேபோல் கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி ஒரு முடிவு இல்லை என 5 புள்ளிகள் பெற்று  6-வது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது .

Categories

Tech |