Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தரமற்ற அரிசி வழங்கல்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

தரமான அரிசி வழங்காததால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பஜார் தெருவில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து செங்கட்டான் தெரு, கோட்டைத் தெரு, கவரைத் தெரு, ஒச்சேரி அம்மன் கோவில் தெருக்களில் 460 குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்பட்டதால்  விற்பனையாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விற்பனையாளர்கள் சரியான தகவல் தெரிவிக்காத காரணத்தால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வாரத்தில் 3 நாட்கள் திறக்கப்படும் கடை 1 நாள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனையடுத்து வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும் குறைவாகவும் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 3 மாதங்களாக பருப்பு வழங்கப்படவில்லை. மேலும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு அரை லிட்டரும், 5 கிலோ கடலைக்கு 1 கிலோவும் வழங்கப்படுகிறது. எனவே ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கவும், வாரத்தில் 3 நாட்கள் கடையை திறக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |