இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது துரதிர்ஷடவசமானது என்று அவர் கூறினார். போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவில் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.