டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. ஆனால் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் 2 -1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.
இதனிடையே வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி, இன்று பிரிட்டனை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே வரிசையாக கோல் அடித்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 – 2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால் நிச்சயம் பதக்கம் உறுதி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிட்டன் அணி அடுத்தடுத்து கோல் அடித்து 3 – 4 என்ற கணக்கில் வெற்றியை தன் வசப்படுத்தியது.
https://www.youtube.com/watch?v=ZvJZpfALG5E
இந்திய அணி பதக்கத்தை இழந்தாலும், அணி வீராங்கனைகள் இம்முறை களத்தில் வெளிப்படுத்திய உத்வேகம் குறித்து பலரும் நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். தொடர்ந்து இந்திய மகளிர் அணியினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். நீங்கள் அனைவரும் சிறப்பான முயற்சியை செய்தீர்கள். இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது என ஆறுதலாக பேசியதை கேட்ட வீராங்கனைகள் தேம்பி தேம்பி அழுதனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.