Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பூட்டியிருந்த வீட்டில்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பெரியார் நகர் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தனலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தனலட்சுமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 7000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தனலட்சுமி அரக்கோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |