Categories
உலக செய்திகள்

இந்த பகுதிக்கு மட்டும் போகாதீங்க..! அடர்சிவப்பு பட்டியலில் உள்ள பிரபல நாடு… மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு பிரான்சில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பல பகுதிகளையும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அடர்சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிரான்சில் உள்ள Midi-pyrenees, Languedoc-Roussillon, Provence-Alpes-Cotes d Azur உள்ளிட்ட பகுதிகள் அடர்சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதிகளுக்கு செல்வதை மக்கள் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அத்தியாவசிய பயணத்துக்காக மக்கள் அனுமதிக்கப்படும் போது கட்டுப்பாடுகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |