Categories
தேசிய செய்திகள்

நடுரோடுனு கூட பாக்காம…. கணவரை விரட்டி விரட்டி அடித்த மனைவி… போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு….!!!

கணவன் மனைவி இடையே சண்டை நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதுவே சில சமயங்களில் எல்லைமீறி கைகலப்பு வரை சென்றுவிட்டால் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய பிரதேச மாவட்டம் தாமோ மாவட்டத்தில் நடு பஜாரில் கணவன் மனைவி இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜ்புத் மற்றும் அவரது மனைவி பூர்ணா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில் பஜார் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த சண்டை நடைபெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்து உள்ளது. பெண் அவரது தந்தை உடன் இணைந்து அவரது கணவரை விரட்டி விரட்டி அடித்துள்ளார். இதில் அந்த நபரின் சட்டை கிழிந்துவிட்டது. அப்போதும் அந்த பெண் அவரை விடவில்லை. கூட்டம் அதிகமுள்ள சாலையில் இவர்கள் சண்டையிட்ட காட்சியை பலர் படம் பிடித்துள்ளனர். திடீரென சண்டை ஏற்பட்டதால் வேடிக்கை பார்க்க பலர் கூடியதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இறுதியாக காவல்துறையினர் தலையிட்டு இருவருக்கும் சமரசம் செய்து வைத்தனர்.

Categories

Tech |