மகேந்திரசிங் தோனி , கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அப்போதுவரை ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த தோனி, ஓய்வு அறிவித்த பிறகு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அவர் ஓய்வு அறிவித்தபிறகு பலமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் எதுவும் பகிர்வது கிடையாது.
இப்படி தோனி தொடர்ந்து ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ப்ளூ டிக் அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது. சமூகத்தில் பிரபலமானவர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் 8.20 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட தோனிக்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.