Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்… வாலிபர் ஒருவர் பலி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது கெங்குசெட்டிப்பட்டி பகுதியில் வசிக்கும் முனியப்பன் மற்றும் சசிகுமார் ஆகிய 2 பேரும் அவர்களின் மோட்டார் சைக்கிளில் காரியமங்கலம் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின் இந்த விபத்தில் முனியப்பன் மற்றும் சசிகுமார்  படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |