டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணியை வென்றது. இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றாலும், உறுதியிடன் இறுதிநிலை வரை சென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்தியா ஹாக்கி மகளிர் அணியின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாகவும் அவர் பாராட்டினார். மேலும் தொலைபேசி உரையாடலின்போது கதறி அழுத இந்திய அணி மகளிரை பிரதமர் மோடி ஆறுதல் படுத்தினார்.
After the Bronze Medal match, Hon'ble Prime Minister Shri @narendramodi Ji spoke to the Indian Women's Hockey Team.
Thank you for your encouragement. 🙏#HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/UY5w7xGmHi
— Hockey India (@TheHockeyIndia) August 6, 2021