தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் பல நாடுகளிலும் மூன்றாவது அலை தொடங்கி விட்டது. எனவே கொரோனா மூன்றாவதாக எந்நேரத்திலும் இந்தியாவிற்குள் நுழையலாம். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிக அளவில் தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
இதனால் கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை அரசு பரிந்துரைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.