Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவர் வருவதே இல்லை… பஞ்சாயத்து தலைவி பொதுமக்களுடன் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பஞ்சாயத்து தலைவி,பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூப்பன்பட்டி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தலைவியாக லிங்கேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரியின் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரி கூறும்போது அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிபவர் அடிக்கடி வேலைக்கு வருவது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வீட்டு வரியை கட்டுவதற்கு செல்லும்போது அவர் இருப்பது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் வீட்டு வரியை செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணிக்கு வராமலிருக்கும் செயலாளரை கண்டித்து வருகின்ற ஒன்பதாம் தேதி அன்று யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்களுடன் இணைந்து  போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாயத்து தலைவி  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |