ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை சென்னை மாவட்டத்தின் ஐ.ஜி. பாஸ்கர் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பாக தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை போன்ற துறைகளில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக எழுத்துத்தேர்வு நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இத்தேர்வில் வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு உடல் தகுதி தேர்வு இம்மாவட்டத்தின் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் உடல் தகுதிப் பார்க்கும் தேர்வில் பங்கேற்க 999 பெண்கள் என 4750 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது முதல் கட்டமாக ஆண்களுக்கு மார்பளவு ,உயரம் பார்த்தல், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய உடல் தகுதிக்கான தேர்வுகள் நடைபெற்றுள்ளது. பின்னர் கலந்துகொண்ட தேர்வாளர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று உள்ளது. அதன் பிறகு பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு இம்மாவட்டத்தின் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 500 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். பின் அவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டம், உயரம் சரிபார்க்கும் பணியும், சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. இந்த தேர்வில் மொத்தமாக 212 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு சென்னை மாவட்டத்தின் ஐ.ஜி. பாஸ்கர், காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா மற்றும் சென்னை டி.ஜி.பி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். பின்னர் ஆண்களுக்குரிய இரண்டாம் கட்ட உடல் தகுதிக்கான தேர்வு வெள்ளிக்கிழமை அன்று தொடங்க உள்ளது. மேலும் அவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் கயிறு ஏறுதல் ஆகிய தேர்வு நடைபெறுகிறது. இதனைப் போல் பெண்களுக்குரிய இரண்டாம் கட்ட உடல் தகுதிக்கான தேர்வு வருகின்ற 12-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. அதில் அவர்களுக்கு நீளம் தாண்டுதல், பந்து எறிதல் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளது.