கொரோனா தொற்றின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தங்கியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அதன் பின் கொரோனா தொற்றை தடுக்க பின்பற்றக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.பின்னர் கலெக்டர் தலைமையில் செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து செவிலியர்கள் பங்கேற்ற கைகழுவும் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டுள்ளது.
அதில் கைகளை எப்படி முறையாக கழுவது குறித்து செவிலியர்கள் செய்முறை விளக்கம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை தடுப்பதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார். பிறகு மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டுமெனவும் மற்றவர்களிடமிருந்து குறைந்த பட்சமாக 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பின்னர் சோப்பு தண்ணீர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளது.