இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . சமீபத்தில் அவருடைய ஹேர் ஸ்டைல் இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை அதிகமாக ஷேர் செய்தனர்.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போது ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் நீண்ட நாட்களாக ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யாததால் அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதிக்கு பிறகு டோனி தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.