நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
உங்கள் டிக்கெட்டை டிக்கெட் சோதனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் சரிபார்க்க முடியாது. பயணிகளின் டிக்கெட் சரிபார்க்கும் உரிமை ரயில்வே துறையால TTE-க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகள் உங்களிடம் இல்லையென்றால் அபராதம் விதிக்க TTE க்கு மட்டுமே உரிமை உண்டு. அவசரமாக டிக்கெட் எடுக்க மறந்துவிட்டால், TTE-யிடம் பேசி அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
சில நேரங்களில் ரயில்வே போலீஸ் படை போலீசார் உங்கள் டிக்கெட்டைச் சரிபார்கள். உங்களிடம் டிக்கெட் இல்லாதபோது மிரட்டி பணம் பறிப்பதும் நடக்கிறது. அப்படி நடந்தால், நீங்கள் பயத்தில் ஆர்பிஎஃப் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சம்பவம் குறித்து உடனே மூத்த அதிகாரியிடம் புகார் செய்யவும். மாஜிஸ்திரேட் ரெய்டின் போது மட்டுமே போலீசார் டிக்கெட்டை சரிபார்க்கலாம். ஆனால், அந்த நேரத்தில் கூட, போலீசாருக்கு அபராதம் விதிக்க உரிமை இல்லை.
ரயில் டிக்கெட் இல்லாமல் நீங்கள் ரயிலில் ஏறிவிட்டால், அதுபோன்ற நேரத்தில் முதலில், TTE உதவியுடன் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட்டை வாங்கிக்கொள்ளுங்கள். ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, எந்தப் பயணியும் தனது டிக்கெட்டை பெற்றோர், கணவன், மனைவி, மகன், மகள், உடன்பிறப்புகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். ரயில் பயணிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரின் பெயரிலும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை தங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம்.