Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பது ஏன்…? – தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு எதற்காக என்பது குறித்து தமிழக ராசு விளக்கமளித்துள்ளது.

அதன்படி, பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு கருத்தையும் ஆராய்ந்து பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

Categories

Tech |