Categories
உலக செய்திகள்

கொரோனாவால் வறுமை நிலையில் 38 லட்சம் மக்கள்.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

மெக்சிகோவில் கொரோனா காரணமாக 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் பொருளாதார நெருக்கடியும்  ஒன்று. எனவே பல நாடுகள், தங்கள் மக்களை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் கொரோனா காரணமாக சுமார் 38 லட்சம் மக்கள் வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் வருடத்தில், 20 லட்சம் நபர்கள் வறுமை நிலையில் இருந்தார்கள். தற்போது  இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 58 லட்சத்தை தாண்டி விட்டதாக சமூக மேம்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. மெக்சிகோவில் உள்ள மொத்த மக்கள் தொகை 5.2 கோடி. இதில் 10.8%  பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |