Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாங்க வேற மாரி’… தல அஜித்துக்காகவே பண்ணுன மாஸ் சாங்… மனம் திறந்து பேசிய யுவன்…!!!

நாங்க வேற மாரி பாடல் உருவான விதம் குறித்து யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வலிமை படத்தில் இடம் பெற்ற நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, அனுராக் குல்கர்னி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். மேலும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நாங்க வேற மாரி பாடல் உருவான விதம் குறித்து யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோவை சோனி மியூசிக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பேசிய யுவன் ‘இது தல அஜித்துக்காகவே பண்ணுன மாஸ் சாங். திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ‌பண்ணுன பாட்டு. இதற்காக ஒரிசாவில் இருந்து டிரம்ஸ் கலைஞர்கள் வந்து வாசித்தார்கள்’ என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |