Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் சட்டவிரோதமான செயல்…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. மதுபாட்டில்கள் பறிமுதல்….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுப்பையன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜசேகர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ராஜசேகர் காந்திநகர் பகுதியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் ராஜசேகர் தப்பியோட முயன்றுள்ளார். அதன்பின் ராஜசேகரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 40 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |