சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் இருந்து ரேஷ்மா விலகியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா. இதை தொடர்ந்து இவர் வாணி ராணி, மரகத வீணை போன்ற பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரேஷ்மா நடித்த ‘புஷ்பா’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார்.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பேவா சீரியலில் வந்தனா என்ற வில்லி கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் அன்பே வா சீரியலில் இருந்து ரேஷ்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதில் ரேஷ்மா மாற்றப்பட்டார். தற்போது கால்ஷீட் பிரச்சினையால் ரேஷ்மா அன்பே வா சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.