செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் கடந்த சில தினங்களாகவே மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நாடு முன்னேற்ற தவிர யாராலும் தடுக்க முடியாது. ஒரு புறம் நம் நாடு ஒலிம்பிக் பதக்கங்களை அடித்து தனது இலக்கை அடைகிறது. மற்றொருபுறம் தங்கள் அரசியல் நோக்கத்துக்காக சிலர் புதிய இலக்கை அடைய முயற்சிக்கின்றனர் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.