Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இளம் பெண்ணை ஏமாற்றி நகையை பறித்துக்கொண்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள நத்தக்காடையூர் பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதே பகுதியில் அன்வர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அந்த இளம்பெண்ணிடம் அன்வர் உசேன் பேச்சுக் கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அவரிடம் இருந்த 28 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தலைமறைவானார்.

தற்போது அன்வர் உசேன் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்டவைகளை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அந்த இளம்பெண் காங்கேயம் தனிப்படை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தலைமறைவாக இருந்த அன்பர் உசேனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த நகை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |