நிக்கோபார் தீவுகளில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிக்கோபார் தீவுகளில் இன்று மதியம் 1:49 மணிக்கு நிலநடுக்கம் உருவானது. தேசிய புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவித்திருக்கிறது. எனினும் இதனால் வேறு எந்த பாதிப்பும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்னரே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் கேம்பெல் பே என்ற பகுதியில், நேற்று நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 என்ற அளவில் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.