Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்மநபர்கள்…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோவிலுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்ற சுப்ரமணியன் உண்டியல் இருக்கும் பகுதியின் இரும்பு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அதாவது மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவில் சுவற்றின் மேலே ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். இதனை அடுத்து மர்மநபர்கள் உண்டியல் பூட்டை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் மர்ம நபர்கள் அங்கிருந்து திரும்பி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |