சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லரஅள்ளி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் சுங்கர அள்ளி கிராமத்திற்கு சொந்த வேலைக்காக சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவர் சைக்கிள் மீது மோதியுள்ளது.
அப்போது மேலே தூக்கி வீசப்பட்ட செந்தில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.