Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும். அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர். மேலும் அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம் தான் பேச முடியும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |