இருசக்கர வாகன விபத்தில் சினிமா ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பழையங்கோட்டைப் பகுதியில் வெங்கடேசன் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா ஒளிப்பதிவாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மருளூத்துவிலக்கு பகுதியில் வெங்கடேசனின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருக்கும் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.