Categories
சினிமா தமிழ் சினிமா

செமயா இருக்கே… நீண்ட தாடி, மீசையுடன் ராகவா லாரன்ஸ்… மிரட்டலாக வெளியான ‘துர்கா’ பட பர்ஸ்ட் லுக்…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் துர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற சூப்பர் ஹிட் திகில் படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தார். இதில் காஞ்சனா படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் ‘துர்கா’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நீண்ட தாடி, மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படத்தை ராகவா லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Categories

Tech |