குடிசை மாற்று வாரியத்தின் 706 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்ட பகுதிகளில் 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அடையாள அட்டை விரைவில் வழங்கவுள்ளது.
அதன் பின் மீதம் இருக்கும் 206 குடியிருப்புகள் இம்மாவட்டத்தில் வீடு இல்லாதோர் மற்றும் நீர்நிலைகளில் வசிப்பவர்களுக்கு அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அவர்களிடமிருந்து குடிசை மாற்று வாரிய அலுவலகம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இதற்கான சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் குடிசை மாற்று வாரியத்தின் 706 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.