Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களிடம் மக்கள் பலரும் ஏமாறி தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்திக்கொண்டு பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாகவும் அதற்கு பணம் கொடுப்பதாகவும் மோசடி கும்பல் விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |