அமெரிக்காவில் ஒரு நபர், தன் காதலியை கொன்று, சடலத்துடன் ஒரே குடியிருப்பில் நீண்ட நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் இருக்கும் ஒரு குடியிருப்பில், Matthew Lewinski என்பவர், அவரின் காதலி Jerri Winters-உடன் வசித்து வந்துள்ளார். அப்போது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த Matthew அவரின் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன்பின்பு அவரின் சடலத்தை தரைத்தளத்தில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டிருக்கிறார். அதன்பின்பு, சடலத்துடன் 7 மாதங்களாக அதே வீட்டில் இருந்திருக்கிறார். அருகில் வசிப்பவர்கள் ரொம்ப நாட்களாகவே அழுகிய நாற்றம் வீசுவதை உணர்ந்திருக்கிறார்கள். எனினும், ஏதேனும் இறந்த விலங்கிலிருந்து நாற்றம் வீசும் என்று நினைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், Matthew-ன் சகோதரி, அவரின் குடியிருப்பிற்கு சென்றிருக்கிறார். அப்போது தரைதளத்தில் ஒரு தார்பாயின் மேல் சடலம் கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், Matthew, தன் காதலியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.