Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அதை வாங்கி தாங்க” தம்பிக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்த தம்பியை அண்ணன் கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் மற்றும் வெங்கடேசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் இருந்த வெங்கடேசன் தனது அண்ணன் சிவகுமாரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்துள்ளார். இதனால் சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த சிவகுமார் வெங்கடேசனை கீழே தள்ளியதால் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வெங்கடேசனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |