ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சிங்கில் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கக் கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடெட் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்குவதை முக்கிய மைல்கல்லாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதாவது இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகிக்க பயோ லாஜிக்கல் நிறுவனம் முக்கிய செயலாற்றுகிறது. மேலும் சுகாதார நிறுவனங்கள், பல அரசுகள், கோவேக்ஸ், கவி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பயோ லாஜிக்கல் நிறுவனம் செயலாற்றி வருகிறது.