இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் இன்று சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கவர்ச்சிகரமான கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை அறிவித்துள்ளது. புதிய பயனாளர் ‘3 பே 2700 கேஷ்பேக் ஆஃபர்’ பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முதல் எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும்போது மாதம்தோறும் 900 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது 2,700 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தற்போது உள்ள பயனாளர்கள் ஒவ்வொரு முன்பதிவில் நிச்சயம் ரிவார்டுகளைப் பெறுவார்கள் பேடிஎம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய முக்கிய எல்பிஜி கம்பெனிகள் இருந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது ‘3 பே 2700 கேஷ்பேக் ஆஃபர்’ கேஷ்பேக் சலுகை பொருந்தும்.