Categories
தேசிய செய்திகள்

மாணவர்க்ளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பீகார் அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதலும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பீகார் மாநில அமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |