தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பிற்கான உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உறுதி மொழியை ஒவ்வொருவரும் சொல்லில் மட்டுமல்லாமல் செயலிலும் பின்பற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நோய் பரவலை தடுக்க ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.