Categories
உலக செய்திகள்

நாட்டுப்பற்று மிக்கவரை இப்படி கொன்னுட்டாங்களே..! பிரபல நாட்டில் பெரும் சோகம்… ஐ.நா. முக்கிய ஆலோசனை..!!

ஆப்கானிஸ்தானின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வான்படை தாக்குதலை அதிகரித்து வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான்கள் “அரசு மூத்த அலுவலர்கள் கொலை செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காபூல் அருகே உள்ள மசூதியில் வைத்து அரசின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் காபூலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் தொடர் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் “நாட்டுப்பற்று மிக்க ஆப்கனை தலிபான்கள் காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளனர்” என்று இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மிர்வைஸ் ஸ்டானிக்ஜாய் கூறியுள்ளார்.

Categories

Tech |