Categories
தேசிய செய்திகள்

நகைக்கடன், வீட்டுக்கடன், கார்கடன் வாங்குவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது நகை கடன், வீட்டுக் கடன், கார் கடன் ஆகியவற்றுக்கான பிராசஸிங் கட்டணத்தை ரத்து செய்வதாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே.

இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடன்களுக்கு 6.90 சதவீதமும் கார்களுக்கு 7.30 சதவீதமும் வட்டி விதிக்கப்படுகிறது. நகை கடனுக்கு 7.10 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நகைகளுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது. மழைக்காலத்தையொட்டி இந்த சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |