Categories
உலக செய்திகள்

ஆற்றில் மிதந்த வாத்து பொம்மைகள்…. சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள்…. ஆவலுடன் கண்ட பொதுமக்கள்….!!

ஆற்றில் மிதந்த மஞ்சள் நிற வாத்து பொம்மைகளை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஒரு அங்கமாக சிகாகோ ஆற்றில் வாத்து பொம்மைகள் விடும் பந்தயம் நடைபெற்றது. இதில் மக்கள் ஐந்து டாலருக்கு மஞ்சள் நிற வாத்து பொம்மைகளை வாங்கி அவற்றை ஆற்றில் மிதக்க விட்டு ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

மேலும் பல விளையாட்டுப் போட்டிகளுக்கு நடுவே இதுபோன்ற வித்தியாசமான போட்டிகளும் நடைபெறுவது அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்த நிலையில் ஆற்றில் மிதக்க விட்ட தங்களின் வாத்துக்கள் முந்திச் செல்கிறதா என்று மக்கள் ஆவலுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

Categories

Tech |